ஒரு மதியம் அலுவலகத்தில் சாவகாசமாய் வலை உலவிக்கொண்டிருக்கையில் ஒரு செய்தியை பார்த்தவுடன் ஏறத்தாழ சேரிலிருந்து கீழே விழ நேர்ந்தது.
பெண்களின் மார்பகங்களை உற்று நோக்குவதால் ஆண்களுக்கு நீள்கிறது.. ஆயுள் என்கிறது ஒரு மேலைநாட்டு ஆராய்ச்சி.
மார்பகங்களை குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் உற்று நோக்கி ஜோள்ளுவதால் ஆண்களின் ஆயுள் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பெருகிறதாம்.
அடடா.. அடடா...அபாரம்...
புல்லரிக்கிறது...
எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள்...
ஆராய்ச்சி என்றால் இதுவல்லவோ?
பாவம் பெண்கள். ஆயுள் நீள்வதற்கு அவர்கள் எதை உற்று நோக்குவார்கள்? ஒருவேளை அதற்கும் ஆராய்ச்சி நடக்கிறதோ என்னமோ? காத்திருப்போம்.
கல்யாணமான ஆண்களின் உயிரை அவரின் மனைவிமார்களாகிய (இந்த செய்தி படித்ததிலிரிந்து வார்த்தைகளெல்லாம் எப்படி வருகிறது பாருங்கள்..) பெண்மணிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிடுங்கி எடுப்பதால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்ய அவர்கள் மூலமாகவே ஒரு தீர்வையும் அளித்து...அடடா..அடடா.. என்ன ஒரு பொயடிக் ஜஸ்டிஸ்... இயற்கையின் கருணையே கருணை...
இப்போது ஒரு உண்மை புலப்படுகிறது..
நம் வெகு ஜன பத்திரிகைகள் இந்த சேவை நோக்கில் தான் நடிகைகளின் ஏறக்குறைய திறந்த மார்பகங்களின் படங்களை ஏராளமாக வெளியிடுகிறது. not to attact eyeballs. என்னே அவர்களின் தீர்கதரிசனம்? அவைகளின் உயரிய இச்சேவையை உண்மை தெரியாமல் நாம் தான் இத்தனை காலமாய் தவறாய் குறை சொல்லிக் கொண்டிரிந்திருக்கிறோம்..
இம்மாதிரியான ஒரு மகத்தான சேவையை பாராட்ட மனமில்லாவிட்டாலும் இனிமேலாவது மனம் திருந்தி விமர்சிக்காமல் இருக்கலாமே. அவ்வாறு விமர்சித்தவர்கள் இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ? பேசாமல் தீர்த்த யாத்திரை கிளம்பி இந்த பஞ்சமஹா பாதகத்தை போக்கிகொள்ளுவதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.
இதே சேவை தான் தொலைகாட்சிகளிலும் "மானாட மயிலாட", "ஜோடி நம்பர் 1 , ராணி ஆறு ராஜா யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்களின் அடிநாதமும் என்று சொல்ல தேவையே இல்லை. இது செய்தி நாளேடுகளின் page 3 பக்கங்களுக்கும் பொருந்தும்.
இந்த ஆராய்ச்சி தகவலை வெளியிட்டது இம்மாதிரி page 3 கலாச்சாரத்திற்கு வித்திட்ட முன்னோடியான "The Times of India" தான் என்பது ஆச்சர்யம் அளிக்கவில்லை.
படிக்க க்ளிக்கவும்:
http://timesofindia.indiatimes.com/life/health-fitness/health/Stare-at-boobs-to-live-longer/articleshow/5304136.cms
சேஷன்
9 years ago