பக்தியில் எத்தனையோ வகை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்...
சத்யராஜ் ஸ்டைல் பக்தி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அதாங்க... லொள்ளு பக்தி!!
சமஸ்க்ரிதத்தில் "நிந்தா ஸ்துதி" என வழங்குவதை தற்க்காலதிர்கேற்ப "லொள்ளு செய்து பக்தி செய்தல்" என்று தமிழ்ப்படுத்தலாம் சாரி...தமில் படுத்தலாம் தானே?
இரண்டு தமிழ்ப்புலவர்கள். ஒருவர் நொண்டி. மற்றவர் குருடு.
இருவரும் பாடி பரிசில் பெற்று காட்டுவழியே வருகையில் இருட்டி விட்டது. இரவைக் கழிக்க அங்கிருந்த பிள்ளையார் கோவிலில் தங்கினார்கள். இவர்களைப் பின்தொடர்ந்த திருடன் அவர்கள் தூங்கும் பொழுது பரிசிலை திருடிக்கொண்டு கோவிலிலேயே மறைந்திருந்தான்.
புலவரிருவரும் பொருள் களவு போனதை அறிந்து பிள்ளையாரைப் பார்த்து இவ்வாறு பாடினர்.
தம்பியோ பெண் திருடி
தாயாருடன் பிறந்த வம்பனோ
நெய் திருடும் மாயன்
அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவித்தீர்
போமோ கோத்திரத்துக்குள்ள குணம்.
இதைக்கேட்ட பிள்ளையார் பக்தனான திருடன் நம்மால் பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதே என வருந்தி அந்த புலவர்களிடம் மன்னிப்புக் கோரி அவரது பொருளை ஒப்படைத்தானாம்.
அதே மாதிரி இன்னொரு புலவர் (இவர் சம்ஸ்க்ருதம்) பிள்ளையாரை நோக்கி
"பூமிக்கு தலைவனை அண்டினால் பூமியை கொடுப்பார்கள்
பணத்திற்கு தலைவனை அண்டினால் பணத்தை கொடுப்பார்கள்
விக்னேஸ்வரனான உன்னை அண்டினால் விக்னத்தை அல்லவா கொடுப்பாய்
உன்னை என் பக்கமே வராதே என்று ஆயிரம் முறை நமஸ்கரிக்கிறேன்"
என்று பொருள்பட பாடியிருக்கிறார்.
இந்த இரண்டு லொள்ளிலும் பிள்ளையாரே மாட்டியிருக்கிறாரே!! மற்ற கடவுளெல்லாம் ரொம்ப கோபக்காரர்களோ?
பி.கு: மற்ற கடவுளைப் பற்றி இம்மாதிரி "லொள்ளு" இருந்தால் தெரியப்படுதுங்களேன். இவ்வலைப்பூவில் பிரசுரிக்கலாம்.
சேஷன்
9 years ago