Friday, August 22, 2008

நியூஸ் பேப்பர்

அம்மா என்றிருக்கிறது.

இப்படி இளைப்பாற அப்படி என்ன சாதித்தாயிற்று?

பீடிகை ரொம்பவும் பலம்தான்.

என்ன செய்வது? சுவாரஸ்யம் கூட்ட இப்படி ஏதாவது செய்ய கட்டாயம் இருக்கத்தான் இருக்கிறது.

இரண்டு நாள் வேலை நிமித்தம் பெங்களூரு 'டூர் ' சென்று விட்டு வர வேண்டியதாகிவிட்டது. ராப்பயணம். காலையில் வந்து இறங்கியதும்
மளமளவென்று பல்லை தேய்த்து காத்திருந்ததில், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் சினிமா கணவனின் தவியாய் தவிப்பு போல் உணர்ந்தேன். சமீபத்தில், நண்பனின் இரண்டாம் குழந்தை பிரசவ சமயம் ஆஸ்பத்திரி அருகில் ராயர் மெஸ்ஸில் இடியாப்பம்-வடகறி சாப்பிட்டுகொண்டிருக்க குழந்தை பிறந்த தகவல் வந்தது. உள்ளூர தவித்திருப்பாநோ?

நிற்க.

ஆறேகால் மணிவாக்கில் வீட்டு வாசல்படியில் சத்தம் கேட்டவுடன், எலி பிடிக்க காது விறைப்பாக்கி தயாராய் இருந்த பூனை போல் பாய்ந்து சென்று...

கையில் நியூஸ் பேப்பர். தி நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்.

அப்போது தான்...

இப்போது இந்த ப்ளாகின் முதல் வரியை படித்துவிட்டு உடனே திரும்புங்கள்...

நான் எக்ஸ்ப்ரெஸ் அபிமானி. இரண்டு மூன்று நாள் தொடர்ந்து படிக்காமல் இருந்தால், வித்ட்ராவல் ஸிம்டம்ஸ் போல் கை நடுங்கும். இன்னும் ஜுரம் வருமளவுக்கு போகவில்லை. அவ்வளவுதான்.

தமிழ் கூறும் நல்லுலகில் பலர் 'ஹிண்டு' படிக்காமல் மலச்சிக்கலில் தவிப்பதுண்டு... அதனால் 'இது சகஜம்' என்று எனக்கு நானே சமாதானம்...

ந்யூஸ் பிரிண்ட் வாசனையுடன் புத்தம் புதிதாய் எனக்கே எனக்காய் அதை எடுத்துப் படிக்கிறேன் இப்போதெல்லாம்.

சிறு வயதில் பேப்பர் படிக்க ஆரம்பித்த போது என் தாத்தாவுடன் போட்டி இருந்தது.

காலை ஆறு மணியளவில் பல் தேய்த்து ரெடியாகி வாசல் திண்ணைக்கு வந்து உட்கார்ந்து விடுவார். காபி திண்ணைக்கு வரும். சூடான காப்பியை நன்கு நுரை போங்க ஆற்றி குடித்து விட்டு இரைக்காக காத்திருக்கும் மலைப்பாம்பு போல உட்கார்ந்திருப்பார.

இந்த சமயத்தில் என் தாத்தாவின் படிக்கும் /தகவலறியும் ஆவல்/பசி/(வெறி?) பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்.

No comments: